ஒன்று டிகிரி முதல் 89 டிகிரி வரை உள்ள கோணம்
விடை
குறுங்கோணம்
91 டிகிரி முதல் 179 டிகிரி வரை உள்ள கோணம்
விடை
விரிகோணம்
நான்கு சமமான கோட்டு துண்டுகளை பயன்படுத்தி ______ உருவாக்கலாம்
விடை
சதுரம்
கணித பெட்டியில் உள்ள வடிவியல் சார்ந்த படங்கள் வரைய பயன்படும் கருவிகள் பெயர்கள்
விடை
அளவுகோல், கவராயம்,
கவை, கோணமானி, மூலை
மட்டங்கள்
செங்கோணம் என்பது
விடை
90 டிகிரி
குறிப்பிட்ட அளவில் கோடு வரைய பயன்படும் கருவி
விடை
அளவுகோல்
ஒரு கோட்டில் குறிப்பிட்ட அளவு கோணம் வரைய பயன்படும் கருவி
விடை
கோணமணி
கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் விரிகோணம் எது.
விடை
110 டிகிரி
கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் குறுங்கோணம் எது
விடை
45 டிகிரி
கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் நேர்கோணம் எது
விடை
180 டிகிரி
இருபுறமும் முடியும் கோட்டினை நாம் எவ்வாறு அழைப்போம்?
விடை
கோட்டுத்துண்டு
கோடுகளின் ஒரு முனை முடிவுற்றும் அடுத்த முனை முடிவுறாமல் தொடர்ந்தால்
விடை
கதிர்