வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

6 உடல் நலமும், சுகாதாரமும்

 I. சரியான விடையைத் தேர்ந்தெடு

 

நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருந்தால் எதைக் குறிக்கிறது.

விடை:

உடல்நலம்

 

தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.

விடை:

மனம்

 

நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்

விடை:

சுத்தமான

 

புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது

விடை:

பற்குழிகள்

 

முதலுதவி என்பதன் நோக்கம்

விடை:

வலி நிவாரணம்

 

காசநோய் என்பது ______________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது

விடை:

மைக்கோபாக்டீரியம் டியூப்ரகுலே

 

 

சுருக்கமாக விடையளி

 

சுகாதாரம் என்றால் என்ன?

சுகாதாரம் என்பது நோய்களைத் தடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தைக் தக்க வைத்துக் கொள்ளவும். குறிப்பாகத் தூய்மை பாதுகாப்பான குடிநீர் உட்கொள்ளல் மற்றும் சரியான முறையில் கழிவு அகற்றுதல் போன்ற நல்ல செயல்களைக் குறிப்பதாகும்.

 

கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.

கண்களைக் தசக்குதல் கூடாது.

நீண்ட நேரமாகத் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கணினி பயன்பாட்டை குறைத்தல் வேண்டும்.

 

உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு

உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கும் போது இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.

சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்புக்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது.


தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன

கண்களை அவ்வப்போது திறந்து மூடுதல் வேண்டும்.

கைபேசியில் உள்ள தொடுதிரையின் பிரகாசம் மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ இருக்கக் கூடாது.

தொடுதிரை சுத்தமாக இருக்க வேண்டும்.

கையேசியை கண்களுக்கு மிக அருகில் வைத்து பயன்படுத்தத் கூடாது.

 

மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறுக.

காலரா

டைபாய்டு காய்ச்சல்


காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

பிறகு கிருமி நாசினிக் களிம்பு இடவேண்டும்.

தொற்று நோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டுத் துணியால் கட்டப்பட

 

முதலுதவியின் அவசியம் என்ன?

உயிரைப் பாதுகாக்க. > நோயாளியின் இரத்தக் கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த > வலி நிவாரணம் அளிக்க

ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவச் சேவை.

 

பற்களை ஆரோக்கியமாக வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்கரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.

ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்கரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.

 

தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

அசுத்தமான காற்று. நீர் உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும். நோய் கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்று நோய்கள் பரவுகின்றன.

 

மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டை குறைக்க கூறும் ஆலோசனை யாது?

மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கின்றன.

பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புரதச் சத்து மிகுந்த உணவினையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

 

விரிவாக விடையளி

 

ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.

காசநோய்

காசநோய் மைக்ரோபாக்ரியம் டியூபர்குலேயெ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை

நோயாளியிடமிருந்து வரும் சளி, எச்சில் மற்றும் உடமைகள் மூலம் பரவுகின்றன.

அறிகுறிகள்

எடை இழப்பு, காய்ச்சல், தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

தடுப்பு மற்றும் சிகிச்சை

BCG தடுப்பூசி போடுதல்

நோயாளிக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

DOT போன்ற தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்துதல்


காலரா

விப்ரயோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை

அசுத்தமான உணவு, அல்லது நீர் மூலம் பரவக்கூடியது.

அறிகுறிகள்

வயிற்றுப் போக்கு, தலைவலி மற்றும் வாந்தி

தடுப்பு மற்றும் சிகிச்சை

சாப்பிடும் முன் கைகளை கழுவுதல்

தெருக்களில் விற்கப்படும் திறந்த வெளி உணவுகளை தவிர்த்தல்

காலராவிற்கு எதிராக தடுப்பூசி போடுதல்.


டைப்பாய்டு

சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை

அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்

பசியின்மை , தீவிரத் தலைவலி, அடி வயிற்றில் புண், அல்லது தடிப்புகள் மற்றும் தீவிரக் காய்ச்சல் (104°F) வரை காய்ச்ச ல்

தடுப்பு மற்றும் சிகிச்சை

கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை உட்கொள்ளுதல்,

முறையாக கழிவுநீர் அகற்றுதல்

தடுப்பூசி போடுதல்


ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? முதலுதவிக்கான — பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுக.

சிறிய தீக்காயங்களைக் குளிர்ந்த நீரில் கழுவி கிருமிநாசினிக் களிம்பு இடவேண்டும்.

கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்புளங்கள் இருந்தால் நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

காயம்பட்ட இடத்தைச் சுற்றி சுத்தமான ஒட்டக் கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத் துணிகளால் சுற்ற வேண்டும்.

பெரிய தீக்காயங்களுக்கு மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும்.

முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகள் :

உயிரைப் பாதுகாக்க

நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த

வலி நிவாரணம் அளிக்க

ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர சிகிச்சை.

 

ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?

மாசுபட்ட காற்று, அசுத்தமான உணவு மற்றும் நீர் வெக்டார்கள் எனப்படும் நோய்க் கடத்திகளாலும் நோய் பரவுகிறது.

சளி மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்கள்

இது பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவுகிறது.

நாசியிலிருந்து வெளியேறும் சளியில் பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படலாம்.

அப்போது நோயாளி நாசியைத் தொட்டபின் வேறு பொருளையோ அல்லது வேறு நபரையோ தொடும் போது வைரஸ் இடம் பெயர்கிறது.

நோயாளியின் தும்மல் மற்றும் இரும்மலின் போது வெளியேறும் துளிகளில் வைரஸ் இருந்தால், அது காற்றில் பரவும்.

எனவே சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயல்களால் வைரஸை பரவாமல் செய்ய முடியும்.