வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

8.1. ஐரோப்பியர்களின் வருகை

8.1. ஐரோப்பியர்களின் வருகை


சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

விடை:

போர்ச்சுகல்


பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிறுவப்பட்டது.

விடை:

கால்பர்ட்

 

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

விடை:

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

 

ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

விடை:

பிரெஞ்சுக்காரர்கள்

 

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி …………………….. வர்த்தக மையமாக இருந்தது.

விடை:

டேனியர்கள்

 

இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______ ல் அமைந்துள்ளது.

விடை:

புதுடெல்லி

 

இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் _____________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது

விடை:

போர்ச்சுகீசிய அரசால்


ஆனந்தரங்கம்.பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் _______ ஆக இருந்தார்.

விடை:     

மொழி பெயர்ப்பாளராக


தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர்

விடை:     

ஆனந்தரங்கம்


வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு 

விடை 

1524

 

 குறுவினா

ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக?

வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுதில்லியில் அமைந்துள்ளது.

இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.

கடந்த காலம் குறித்த பல்வேறு தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இது விளங்குகிறது.


நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

நாணயங்கள், நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன

நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் வெளியிடப்பட்டது.


இளவரசர் ஹென்றி ‘மாலுமி ஹென்றி’ என ஏன் அழைக்கப்படுகிறார்?

போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி, உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.

கடற்பயணம் மேற்கொள்வது குறித்து ஒரு தனிப் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.

எனவே இளவரசர் ஹென்றி பொதுவாக மாலுமி ஹென்றி’ என அழைக்கப்படுகிறார்.


இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் முதலிய பகுதிகளே டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாகும்.


இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.

சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச். சென்னை . பம்பாய், கல்கத்தா, மசூலிப்பட்டினம் மற்றும் சால்செட்


விரிவான விடையளி

நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

நவீன இந்திய ஆதாரங்கள்:

நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய உதவுகின்றன.

ஆரம்பம் முதலே போர்ச்சுகீசியர். ஆங்கிலேயர் உள்ளிட்ட பல ஐரோப்பியர்களால் திறம்பட பதிவு செய்த அரசாங்க பதிவேடுகள் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.

லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

எழுதப்பட்ட ஆதாரங்கள்:

இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், நாட்குறிப்புகள், சுயசரிதை, துண்டு பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் முதலியவை எழுதப்பட்ட ஆதாரங்களாகும்.

அச்சு இயந்திரம் மூலம் பல மொழிகளில் எண்ணற்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

குறிப்பாக ஆனந்தரங்கம் என்பவரின் நாட்குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்று ஆதாரமாகும்.

எழுதப்பட்ட ஆதாரங்கள் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.

பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள்:

ஓவியங்கள், சிலைகள், வரலாற்றுபுகழ்மிக்ககட்டிடங்கள், நாணயங்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொல்பொருட்கள் போன்றவை பயன்பாட்டு பொருள் ஆதாரங்களாகும்.

குறிப்பாக ஓவியங்கள், சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன.

நாணயங்களும் நம் நிர்வாக வரலாற்றை அறிய உதவும் ஒரு நல்ல ஆதாரமாகும்.


போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

போர்ச்சுக்கல்:

ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது.

கி.பி. 1498-ல் வாஸ்கோடகாமா முதன் முதலாக தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். மன்னர் சாமரின் அவரை வரவேற்றார்.

இவர் 1501-ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தபொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.

இதன் பிறகு கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை அவர் நிறுவினார்.

இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.

கி.பி. 1505-ல் பிரான்சிஸ்கோ -டி-அல்மெய்டா இந்திய போர்ச்சுக்கீசிய பகுதிகளின் முதல் கவர்னரானார்.

இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்தும் நோக்கில் ‘நீலநீர்க் கொள்கை’யை பின்பற்றினார்.

டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா முஸ்லீம் கூட்டுப்படைகளைத் தோற்கடித்தார்.

கி.பி. 1509-ல் கவர்னரான அல்போன்சோ -டி-அல்புகர்க் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவினார்.

இவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கி.பி. 1510-ல் கோவாவைக் கைப்பற்றினார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.

கி.பி. 1529-ல் மூன்றாம் கவர்னரான நினோ-டி-குன்ஹா டையூ, டாமன் போன்ற பகுதிகளை கைப்பற்றினார்.

இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்ட