வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

8.2. தமிழ்மொழி மரபு

 8.2. தமிழ்மொழி மரபு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

பறவைகள் ____ பறந்து செல்கின்றன.

விடை

விசும்பில்

 

ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானது ___ ஆகும்

விடை

உலகம்

 

இயற்கையைப் போற்றுதல் தமிழர் _______

விடை

மரபு

 

 இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____

விடை

இரண்டு + திணை

 

 ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____

விடை

ஐந்து + பால்

 

திணை ___ வகைப்படும்.

விடை

இரண்டு

 

பால் ____ வகைப்படும்.

விடை

ஐந்து

  

எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை ___ என்பர்.

விடை

அளபெடை

 

தொல்காப்பியத்தின் ஆசிரியர் _____

விடை

தொல்காப்பியர்

 

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ____ ஆகும்.

விடை

தொல்காப்பியம்

 

தொல்காப்பியம் ______ அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

விடை

மூன்று


கூடுதல் வினாக்கள் 


இரு வகை திணைகள் யாவை?.


உயர்திணை, 

அஃறிணை.


ஐம்பால்கள் எவை?


ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன்பால்

பலவின்பால்.


ஐம்பூதங்கள் யாவை?


நிலம், 

தீ, 

நீர், 

காற்று, 

வானம்.


உயிரளபெடை என்றால் என்ன?


செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும். இஃது உயிரளபெடை எனப்படும்.