8.3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ____ காரணமாக அமைந்தது.
விடை
அச்சுக்கலை
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து _____ என அழைக்கப் படுகிறது.
விடை
வட்டெழுத்து
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்
விடை
வீரமாமுனிவர்
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
விடை
வீரமாமுனிவர்
எதில் எழுதும்போது நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.
விடை
ஓலைச்சுவடி
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ____
விடை
சிலப்பதிகாரம்
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க _____ பயன்படுத்தினான்.
விடை
சைகைகளை
குறுவினா
ஓவிய எழுத்து என்றால் என்ன?
தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்ததால் அதனை ஓவிய எழுத்து என்பர்.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
(i) புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.
(ii) நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்.
ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
‘எ’ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என்னும் எழுத்தை நெடிலாகவும் ‘ஒ’ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ‘ஓ’ என்னும் எழுத்தாக உருவாக்கினார்.
சிறு வினா.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
(i) ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.
(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (1) பயன்படுகின்றது.
ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு ()ை பயன்படுகின்றது.
ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.
நெடுவினா
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
(i) மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும், பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
(ii) அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
(iii) தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
(iv) அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.
(v) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை’ என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.